இதய ஆசைகள் நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன் இனிமையாகவே
சொர்க்க வாசலின் படிகள் ஏறினேன்
சுகமும் கோடிகள் அடைந்து வாழ்கிறேன்
ஆழம் தேடிடும் மீன்களை போலே
நீலக் கடலிலே நீந்தி போகிறேன்
சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம் பச்சை கொடி காட்டி வெற்றி பிரதிபளிக்குதே
பிரபலமாகவே பிறந்த ஆளடா
புதிய பாதையை திறக்கிறேன்
உலக மேடையில் உதித்த ஆனடா
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்
பழைய பாணிகள் புதிய பாணிகள்
கரைத்து பூசிய கலைஞன் நானடா
பற்றட்டும் என் சாலையில் பணிகள் மூட்டமே
திக்கெட்டும் கூடட்டும் ரசிகர் கூட்டமே
ஆழம் தேடிடும் மீன்களை போலே
நீலக் கடலிலே நீந்தி போகிறேன்
சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம் பச்சை கொடி காட்டி வெற்றி பிரதிபளிக்குதே
பிரபலமாகவே பிறந்த ஆளடா
புதிய பாதையை திறக்கிறேன்
உலக மேடையில் உதித்த ஆனடா
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்
என்னை ரசிக்கிறேன் எனக்குள் மிதக்கிறேன்
கைகள் முறுக்கியே கர்வம் அளக்கிறேன்
சிந்தும் ஒளியிலே சித்திரம் விளைக்கிறேன்
சங்கத் தமிழிலே சங்கம் தருகிறேன்
பிரபலமாகவே பிறந்த ஆளடா
புதிய பாதையை திறக்கிறேன்
உலக மேடையில் உதித்த ஆனடா
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்