Kongunattu Thendralukkum Songs Lyrics

Kongunattu Thendralukkum

கொங்குநாட்டு தென்றலுக்கும்
Movie
Vanavarayan Vallavarayan
Music
Yuvan Shankar Raja
Lyrics
Snehan

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொன்னு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும்
மருதமலை முருகனுக்கும் மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா செந்தமிழோ நாவில் புரளும்டா
வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது
செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது
ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொன்னு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும்

பசுமை நிறைஞ்ச வயலு ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு
மேற்குதொடர்ச்சி மலையில் மோதி செதரிகிடக்கும் தங்கவெயிலு
மலையின் மடியில் சாய்ந்து புரண்டு படுத்து கிடக்கும்
மரம்புடுங்கி கவுண்டன் ஊரில் மைனருங்க ரெண்டு பேரு
ஆடுபுலி ரெண்டும் இங்கே அண்ணன் தம்பியாய் இருக்கு
ஆனாலும் பாசத்துக்கு இவங்க தான் விதிவிலக்கு
அதுக்கும் ஓர் கதை இருக்கு கேளுங்கடா இவங்க கதையத்தான்
வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது
செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது
ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொன்னு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும்

உறவு நெறைஞ்ச குடும்பம் உலகம் அதுல அடங்கும்
வீடு வாசல் வீதியெல்லாம் பாலை போல பாசம் பொங்கும்
உயிரை உடலை பிரிஞ்சா வாழ்க்கை இல்லடா கோவிந்தா
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அப்படி தான் சேர்ந்து வாழ்ந்தார்
அண்ணனுக்கு கன்னி ராசி பொண்ணு மட்டும் கெடைக்கலடா
தம்பிக்குத்தான் பொண்ணுங்கள சுத்தமாக புடிக்கலடா
ஊருசனம் தூங்கலடா கேளுங்கடா இவங்க கதையைத்தான்